Saturday, July 3, 2010

அல்கா அஜித் - கான குயில்


விஜய் டீவி யில் சமீபத்தில் முடிவுற்ற ஒரு கான யுத்தம் முடிவுக்கு வந்தது. வெற்றி பெற்றவர் அல்கா அஜித். அவர் பாடிய "சிங்கார வேலனே" பாடல் என்னை மட்டுமல்ல அந்த மாபெரும் சபையையும் ஈர்த்து விட்டது என்பதில் துளி கூட ஐயமில்லை.
அப்பப்பா என்ன ஒரு தெய்வீக குரல்! அப்படியே கட்டி போட்டு விட்டது. என்னை அறியாமல் எழுந்து நின்று கை தட்டினேன் என்றால் பாருங்களேன். அந்த காட்சியைக் காண கீழே கிளிக் செய்யவும்.

Thursday, July 1, 2010

உழவாரம் - ஒரு தொலைநோக்கு பார்வை

உலகில் தோன்றிய பழமையான மற்றும் தொன்மையான மொழி தமிழ். அதே நேரத்தில் தொன்மையான சமயம் சைவமாகதான் இருக்க முடியும். ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் அந்த சைவம் இப்போது சாகும் தருவாயில். அதை மெல்ல சீர்திருத்தி செப்பனிட்டு வரும் பணியை செய்து வரும் எங்கள் அய்யா திரு. ராஜசேகரன் அவர்களால் உருவாக்கப்பட்டு செவ்வனே செயல்பட்டு வரும் ஒரு இயக்கம் தான் "உழவாரம்" . அப்பர் பெருமான் தன கையில் எப்போதும் ஒரு கருவி வைத்திருப்பார், தோசை கரண்டி போல இருக்கும். அதன் பேர் தான் உழவார கருவி. அதை பயன்படுத்தி அவர் கோவில்களில் மண்டி கிடக்கும் தேவையற்ற புற்களை, புதர்களை களை எடுக்க பயன்படுத்தினார். அந்த கருவியையே எங்கள் அய்யா தனது இயக்கத்துக்கு தலைப்பு பெயராக பயன்படுத்துகிறார். சைவ சமூகத்தில் மண்டி கிடக்கும் தேவையற்ற பதர்களை களை எடுக்க, சைவ சமய வளர்ச்சி, அதன் பெருமைகளை உலகோருக்கு எடுத்துரைக்க இயம்பப்பட்டதுதான் "உழவாரம்". இந்த இயக்கத்தின் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்க்கு சைவத்தின் வரலாறு, வளர்ச்சி இவைகளை பற்றி அறிஞர் பெருமக்களை வைத்து வகுப்புகள் நடத்தி அவர்களுக்கு அந்த பாடத்தில் தேர்வுகள் வைத்து வெற்றி பெறுவோருக்கு பரிசுகளும், பட்டயங்களும் வழங்கி அவர்களையும், சைவத்தையும் கௌரவபடுத்தி வருகிறார்.

இந்த "உழவாரம்" அமைப்பைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள அல்லது கலந்துக் கொள்ள நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி,

தலைமை ஆசிரியர்,
சீனிவாசா மேல்நிலைப் பள்ளி
மேலையூர்
சீர்காழி தாலுகா
நாகை மாவட்டம்
609107.

அழிவின் விளிம்பில் - பூம்புகார்



பூம்புகார்
புராதன நகரம் இப்பொழுது அழிவின் விளிம்பில் தொக்கி நிற்கிறது. கவனிப்பார் இல்லாத ஒரு நகரமாகி கொண்டிருகிறது. ஒரு காலத்தில் சோழ மண்டல தலைநகரமான இவ்வூர் இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் தன்னுடைய சுயத்தை இழந்து வருகிறது. அருமை தெரிந்த முதல்வரும் கூட கவனிக்கவில்லை ஏனோ.
மேலையூர் நகுலன்