உலகில் தோன்றிய பழமையான மற்றும் தொன்மையான மொழி தமிழ். அதே நேரத்தில் தொன்மையான சமயம் சைவமாகதான் இருக்க முடியும். ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் அந்த சைவம் இப்போது சாகும் தருவாயில். அதை மெல்ல சீர்திருத்தி செப்பனிட்டு வரும் பணியை செய்து வரும் எங்கள் அய்யா திரு. ராஜசேகரன் அவர்களால் உருவாக்கப்பட்டு செவ்வனே செயல்பட்டு வரும் ஒரு இயக்கம் தான் "உழவாரம்" . அப்பர் பெருமான் தன கையில் எப்போதும் ஒரு கருவி வைத்திருப்பார், தோசை கரண்டி போல இருக்கும். அதன் பேர் தான் உழவார கருவி. அதை பயன்படுத்தி அவர் கோவில்களில் மண்டி கிடக்கும் தேவையற்ற புற்களை, புதர்களை களை எடுக்க பயன்படுத்தினார். அந்த கருவியையே எங்கள் அய்யா தனது இயக்கத்துக்கு தலைப்பு பெயராக பயன்படுத்துகிறார். சைவ சமூகத்தில் மண்டி கிடக்கும் தேவையற்ற பதர்களை களை எடுக்க, சைவ சமய வளர்ச்சி, அதன் பெருமைகளை உலகோருக்கு எடுத்துரைக்க இயம்பப்பட்டதுதான் "உழவாரம்". இந்த இயக்கத்தின் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்க்கு சைவத்தின் வரலாறு, வளர்ச்சி இவைகளை பற்றி அறிஞர் பெருமக்களை வைத்து வகுப்புகள் நடத்தி அவர்களுக்கு அந்த பாடத்தில் தேர்வுகள் வைத்து வெற்றி பெறுவோருக்கு பரிசுகளும், பட்டயங்களும் வழங்கி அவர்களையும், சைவத்தையும் கௌரவபடுத்தி வருகிறார்.
இந்த "உழவாரம்" அமைப்பைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள அல்லது கலந்துக் கொள்ள நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி,
தலைமை ஆசிரியர்,
சீனிவாசா மேல்நிலைப் பள்ளி
மேலையூர்
சீர்காழி தாலுகா
நாகை மாவட்டம்
609107.
No comments:
Post a Comment