Thursday, August 4, 2011

ஏன்?

பூக்களை
பறிக்க
வந்த
பெண்ணே!
என்
மனதை
மட்டும்
ஏன்
முறித்து விட்டாய்?!!!

Wednesday, January 12, 2011

மலர் விடு தூது...

உன் கார்மேகக் கூந்தலில்
பூச்சூடுவதற்க்காக
நான் வாங்கிய
ரோஜாமலரிடம் சொன்னேன்...


‘மெல்லிய மலரே...
உன்னை விட மென்மையானவளிடம்
உன்னைச் சூடக் கொடுக்கிறேன்...
அவள் கார் மேகக் கூந்தலில்
அழுத்தமாய் உட்காராதே
அவளுக்கு காயம் பட்டுவிடும்...’ என்று...

மலரும் அதற்க்கு
‘ம்ம்ம்..சரி...’ என்றது

அவளைப் பார்த்ததும்
அழகாய் ஒரு புன்னகையை
வீசி விட்டு...
அப் பெண்மையிடம்
என் காதலை மென்மையாய்ச் சொல்... என்றேன்

மலரும் அதற்க்கு
‘ம்ம்ம்..சரி...சொல்கிறேன்’ என்றது..!


என்னவளின் மனசு
போல உன் நிறமிருக்கிறது
என்று பெருமை கொள்ளாதே..?
அவளது மனது..
வெண்ணிலவை விட வெண்மையானது
வெண் பனியை விடத் தூய்மையானது..!
என்றேன்..!

மலரும் அதற்க்கு
‘ம்ம்ம்..சரி...’ என்றது..!

உனக்கு வாசமில்லை என்று வருந்தாதே...
அவளுக்கு வாசமுண்டு...
அவள் வாசத்தை
நீ சுவாசித்தால்
நீயும் மணக்கும் மலராவாய்...
மல்லிகைப் பூவாவாய்...
நீ மணந்தால் மட்டும் போதாது
அவள் வாசத்தை வாங்கி
என்னிடம் அனுப்பு
நானும் அதை சுவாசிக்க வேண்டும்...
என்றேன்...

மலரும் அதற்க்கு
‘ம்ம்ம்..சரி...
அப்படியே செய்கிறேன்’ என்றது..!

என்னன்பையும்
என் காதலையும்
அவளிடம் அன்பாய்ச் சொல்...
அவள் நினைவில்தான் வாழுகிறேன்...
நிஜத்தில் அவளின்று வாடுகிறேன்
என்றும் சொல்லென்றேன்..!

மலரும் அதற்க்கு
‘ம்ம்ம்..சரி...சொல்கிறேன்’ என்றது..!

சொல்லி விடுமென்று காத்திருந்தேன்..?
அந்த மலரோ...
உன் கார்மேகக் கூந்தலில்
ஏறிய மயக்கத்தில்
அத்தனையும் மறந்துவிட்டு
அசடு வழிந்தபடி சிரித்தது..!
அதுவும் என்னைப் போலவே..!

உன்னருகில் நானிருக்க.....

நீ மகிழ்ச்சியாய் இருக்கும் போது
உன்னருகில் நானிருப்பதை விட
நீ துன்பத்தில் துவளும் போது
உன்னருகில் நானிருக்க
ஆசைப்படுகிறேன் அன்பே..!
ஏனென்றால்...
உனக்கு நான் எப்போதும்
ஆதரவாய்த் தோள் கொடுப்பதையே
விரும்புகிறேன்..!

உறவு - வகைகள்


பிரிவு...


முள்ளில்லாத ரோஜாவென கையில் ஏந்தினேன்

பிரிவு எனும் முள்ளால் நெஞ்சை குத்தி விட்டாயே...
உன் தோல் சாய்ந்து கண்கள் மூடும் நேரம்
தாய் மடி உறக்கம் தந்தவள் ஆனால் என்
உறக்கங்கள் தொலைக்கும் பிரிவை தந்து விட்டாயே ! ! !
என் உணர்வுகளை கடந்து செல்கிறாய்
உன் உணர்வுகளை மூடி மறைத்து கொண்டு ! ! !
உருவங்களின் மேல் தோற்றம் இல்லை உன் மேல் கொண்ட அன்பு
சொர்க்கம் தாண்டி வென்ற உள்ளத்தின் தோற்றம் அது ..
ஆனால் நீ வெறும் கானல் நீராய் என்னை ஏமாற்றிக் கொண்டே ! ! !

நம் உறவின் அர்த்தங்கள் தேடி சொர்க்கத்தில்
தொலைந்த என்னை நரகத்தில் கண்டெடுத்தேன்
உனைப் பிரியும் நேரமிதில் ..............
உருவங்கள் பிரிந்தாலும் உணர்வுகள் தொலைந்து போவதில்லை....

காதலி

அவளின் மறுத்தலும் மொழிமௌனமும்
மென்மையாய் வழி மாறச் சொல்லும்.
ஆனால் விழிமௌனங்கள்
கூச்சல் போட்டுக் குழப்பி வைக்கும்.
கூச்சலில் ஒன்றும் புரியாவிடிலும்
ஓர் அர்த்த மாயை அமைந்திருப்பது போல்
கானல் நீர் காட்டிக்
காத்திருக்க வைக்கும்.

இருள் ?


கானல் நீரென்று

புரியாமல் கனாக்கண்டு
காதல் வளர்த்தும்
தாகம் வளர்த்தும்
தவித்துத் தவித்துத்
தொடர்ந்து வந்தேன்.

ஒரு புனிதக் கணத்தில்

மின்னலாய்த் தெறித்து
நான் மட்டும் பார்த்த
காதலின் தேவ ஒளியை
அவளறிய வாய்ப்பில்லை.

அந்த ஒருகணத்து மின்னலைத்

தக்கவைத்துத் தடம்புரட்டி
மனம் மாற்றி மின்னிணைத்து
அவள் கண்ணில் ஒளிரவைக்க ..
.........
.........
?

சேர்த்துவைத்த மின்னலொளி

சிறுகச்சிறுகக் குறைந்து போய்
என் பாதையில்
இருள் புலர்கிறது !

ஒளி ?


எனக்கு மட்டும்தான்

மின்னல் தெறித்திருக்கிறது.
எனக்கு மட்டும்தான்
சாரல் சிலிர்த்திருக்கிறது.
எனக்கு மட்டும்தான் !
காதலின் மாயை!

நான் பார்த்த அந்த மின்னல்

மேற்கில் விழுந்ததா
கிழக்கில் விழுந்ததா
உன் கண்ணைத் துளைத்ததா ?
என்று
அடம்பிடித்து நான் கேட்டால்
அவள் பாவம் என்ன சொல்வாள் ?

சொல்லாமல் போகிறாளே

காதலெல்லாம் குப்பையென்று
குழப்பத்தில் பழிப்பித்தால்
காதல் பாவம் என்ன செய்யும் ?

சில மேக உரசல்கள்

புனித மின்னல்களாய்த் தெறித்தாலும்

மழை தரிப்பதில்லை .

காதலில்

காதலிக்க நிறைய உள்ளது
ஒரு 'காதலி'
கூடாமல் போனாலும் !

மின்னல் மறுமுறை வரட்டும்.

உனக்கொன்றும்
எனக்கொன்றுமாய்.
அதுவே பொருத்தம்.
பாவம் நான் வேறென்ன சொல்வேன் ?

ரணம்...

என் ரணங்களை
உன்னால்
உணர முடியாது
ஏனெனில்
அதன் பொட்டளவைக் கூட
நீ அனுபவித்ததில்லை....